தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கத்தானில் துறைமுக ஊழியர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இன்று வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வாக்கத்தான் நடை பயணம் தூத்துக்குடி துறைமுக வ உ சி சிலையிலிருந்து துவங்கி துறைமுக அலுவலகம் வரை நடைபெற்றது இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை துறைமுக சபை ஆணைய தலைவர் சுஷாந்தகுமார் புரோகித் தூவக்கி வைத்தார்துறைமுக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் மூலம், தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சியை கடைப்பிடிப்பதன் அவசியம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் மற்றும் குழு ஒற்றுமை ஆகியவை வலியுறுத்தப்பட்டன.
விளையாட்டு என்பது போட்டிகளில் பங்கேற்பதற்காக மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது. துறைமுகத்தில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

ஆரோக்கியமான உடல் – ஆரோக்கியமான மனம்” என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்த வாக்கத்தான், துறைமுக ஊழியர்களிடையே உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்தது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.