தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்கள் மற்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று மூன்றாவது வது நாளாக ஆஜராகி கையெழுத்திட்டார்.
விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கடந்த மாதம் கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது தமிழக முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவதூறு கருத்துக்களை பரப்பும் வகையிலும் பேசினார் இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது நான்கு பிரிவினில் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் ஆஜர் படுத்தினர்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமதி மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார் இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயண் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தரப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு மனுவை விசாரணை செய்த நீதிபதி மார்க்கண்டேயனுக்கு கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத நாட்களில் சம்பந்தப்பட்ட வழக்கு பதிவு செய்த காவல் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் இல்லாததை தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று மூன்றாவது நாளாக ஆஜராகி கையெழுத்திட்டார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.