தூத்துக்குடி:

தூத்துக்குடி ஓமன் நாட்டில் பலியான தூத்துக்குடி கப்பல் மாலுமி நிசாந்தின் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆறுதல் கூறினார். அவரது உடலை உடனடியாக ஓரிரு நாளில் மீட்டு சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செய்து கொடுக்கப்படும் என அமைச்சர் ஸ்ரீநாத் உறுதியளித்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த். கடந்த 11ஆம் தேதி ஓமன் நாட்டில் வைத்து கப்பலில் உடல் நலக்குறைவு காரணமாக பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஓமன் தலைநகர் மஸ்கட்டில் தற்போது உள்ளது.

இந்த நிலையில் கப்பல் மாலுமி நிஷாந்தின் மனைவி மற்றும் குடும்பத்தினர் நிஷாந்த் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் . அவரது உயிரிழப்பிற்கு கவனக்குறைவாக இருந்த கப்பல் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் விரைந்து அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் தமிழக அரசு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதை தொடர்ந்து நிஷாந்தின் மனைவி சாரோபின் மற்றும் குடும்பத்தினரை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவரது உடலை உடனடியாக தாயகம் மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் அவரது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நிசாந்தின் மனைவியிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கூறுகையில், நிஷாந்தின் மனைவி மற்றும் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளேன். மேலும் தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரிடம் பேசி அவரது உடலை இரண்டு ஒரு நாளில் தூத்துக்குடி கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தூதரகம் மற்றும் அதிகாரிகளுடன் பேசி அவர்களுக்கு தேவையான இழப்பீடு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு சார்பில் அவரது கல்வித் தகுதி ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் அவருடைய இரண்டு குழந்தைகள் படிப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை நானும் எனது துறையும் சேர்ந்து உதவி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். 

அனைத்து நடவடிக்கையும் துரிதமாக எவ்வளவு விரைவாக செயல்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இரண்டு தூதரகங்கள் மூலமும் பேசப்பட்டு விறைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Related

“சீமைக்கருவேல மரங்களை ஒழிக்க அரசு திட்டம் வகுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்!”