தூத்துக்குடி:
கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சி விஸ்வகர்ம துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைவர் பாலமுருகேசன், பொருளாளர் முருகேஷ், தலைமையில் சிறப்பு விருந்தினர் தூத்துக்குடி சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் காந்திமதி கலந்து கொண்டார். பள்ளி மாணவிகளுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை குறித்து விளக்கியும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக வலைதள பாதுகாப்பு குறித்தும் மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்.
பள்ளி மாணவிகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு குறித்து சிங்கப்பெண் அதிரடி படை மொபைல் நம்பர் 1091 எந்த நேரத்திலும் பயன்படுத்தி சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நாங்கள் வந்து விடுவோம் என்று கூறினார். இதில் சிங்கப் பெண் காவலர்கள் மஞ்சுளா தேவி. விஜயமலர். பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு
உயர்நிலைப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர் பாண்டிகுமார் வரவேற்புரை ஆற்றினார்.ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.