தூத்துக்குடி: இளைஞர் அருணாச்சலத்தை தாய் கண் முன்னே காவல்துறை அடித்துள்ளனர். இதில் தொடர்புடைய காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் இதுபோன்ற காவல் நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .விசில் சின்னத்திற்கு ஓட்டு போட்டதற்கான பலனை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் உயிரிழந்த இளைஞர்  அருணாச்சலம் குடும்பத்தை பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சம்பவம் குறித்து கேட்டிருந்தார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்

தூத்துக்குடி அருணாச்சலத்தை காவல்துறையினர் அவரது தாய் கண் முன்னே அடித்து கொடுமைப்படுத்தி  தற்போது கொலை செய்து இருக்கிறார்கள். அருணாச்சலத்தின் உதவியாள்தான் அந்த குடும்பம் வாழ்வாதாரம் இருந்துள்ளது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் அடித்துக் கொன்று இருக்கிறார்கள்.

 இதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் .

இது தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் நாகர்கோவிலில் இதே போன்று காவல்துறை அடித்து சபரி  இறந்திருக்கிறார். இது இரண்டாவது நிகழ்ச்சி அல்ல தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 இது தென்பாகம் காவல் நிலையத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு பெண் இறந்து உள்ளார் . அந்த பெண் பாலியல் வன்கொடுமையால் இறந்து உள்ளார். இதுவும் இந்த தென்பாகம் காவல் நிலையத்தில் எல்லையில்  நடந்துள்ளது . காவல்துறையினர் அத்துமீறி  மனிதாபிமான மற்ற முறையில் தாய் தன் முன்னே மகன் மீது தடியடி நடத்தி இருக்கிறார்கள்.  

இப்போது சட்டமன்ற உறுப்பினர்   மார்க்கண்டேயனை கைது செய்யும் போது கூட காவல்துறையினர் நாக்கை துருத்திக்கொண்டு பத்திரிகையாளர்களை மிரட்டி உள்ளனர். ஒழுங்கா இரு அடி பட போற என்று சொல்லி இருக்கிறார். 

இதுபோன்ற அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. நான் பல பல பத்திரிக்கையாளர் சந்திப்பு சொல்லிக் கொண்டிருக்கிறேன் .

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்  விசில் சின்னத்திற்கு ஓட்டு போட்டார்கள். ஆனால் அதனுடைய பலனை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகம் படம் பார்ப்பதில் தான் இருக்கிறார்கள். வாக்களித்த மக்களுக்கு தங்களுடைய உரிமைகளை பெற்றுத்தர அக்கறை செலுத்தவில்லை. இதை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அப்போது அவரது அருகே இருந்த அருணாச்சலத்தின் தாய் பேட்டி கொடுத்தார். அப்போது:  இவ்வளவும் பண்ணிவிட்டு படம் பார்த்து ஜாலியாக படம் பார்த்துட்டு இருக்கிறார். தியேட்டரில் உட்கார்ந்து கொண்டே அவர்களுக்கு மனசாட்சி இல்லையா? எனக் கூறினார்.

Related

“தமிழ்நாடு முதல்வர் நீட் தேர்வுக்கு எதிரானவர் என்றால் மாணவர்கள் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும் : மனிதநேய மக்கள் கட்சி”