தூத்துக்குடி: தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள சிறுபாடு சவேரியார்புரத்தை சேர்ந்தவர் மரியமிக்கேல். இவரது மனைவி சபிதா ரோனிகம். இவர்களது குழந்தைகள் மரிய நிரோஷா. புதுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மற்றொரு மகன் மரிய கெனிஸ்டன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இவர்களுடன் மரிய மிக்கேலின் தந்தை 75 வயதான அந்தோணி முத்து வசித்து வருகிறார்.
மரியமிக்கேல் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மரியமிக்கேலின் மனைவி சபிதா ரோனிகம் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுள்ளார். இதன் காரணமாக மரியமிக்கேல் மனம் உடைந்து காணப்பட்டு இருந்துள்ளார் .
இதைத்தொடர்ந்து டிரைவர் வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு மரிய மிக்கேல் சென்று வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற மனை வேதனையில் இருந்த மரியமிக்கேல் இரவில் தற்கொலை செய்யும் முடிவு எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு சிக்கன் உள்ளிட்ட உணவுகளை வாங்கி வந்து கொடுத்துள்ளார் .

பின்னர் குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது மரியமிக்கேல் மின்சார வயரை தனது இரண்டு குழந்தைகள் கை கால்களில் கட்டியும் தனது உடலில் கட்டியும் மின்சாரத்தை பாய்த்து துடிதுடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் அவரது வயதான தந்தை மட்டும் வெளிய படுத்திருந்துள்ளார். உள்ளே மூன்று பேரும் படுத்து இருந்துள்ளனர். ஆனால் பிற்பகல் 12 மணி வரை பூட்டப்பட்ட கதவு திறக்கப்படாத தொடர்ந்து முதியவர் அந்தோணி முத்து அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் வந்து பூட்டப்பட்ட கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே மரியமிக்கேல் மற்றும் குழந்தைகள் மரிய நிரோஷா மரிய கெனிஸ்டன் ஆகியோர் கட்டிலில் படுத்திருந்த மின்சார வயர்கள் உடலில் கட்டியபடி வாயிலிருந்து ரத்தம் மற்றும் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை அடுத்து காவல்துறையினர் மூன்று பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள சவேரியார் புரத்தில் மனைவி தங்களை விட்டு வேறு ஒருவருடன் சென்ற சோகத்தில் தந்தை தனது இரண்டு குழந்தைகளுடன் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.