கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு நீர், கழிவுநீர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு விடப்படுகிறது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் தங்களது லாரிகளை சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சேகரிக்கப்படும் திருமழிசையில் கொண்டு செல்ல நேர விரயம் மற்றும் பணம் விரயும் ஆவதால் இதனால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாவதாகவும், அரசு உடனடியாக கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் எனவும் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பாலாஜியிடம் கழிவுநீர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ராமலிங்கம் சட்ட ஆலோசகர் சம்பத் கழிவுநீர் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் கோபி பொருளாளர் வீராசாமி உள்ளிட்ட கோரிக்கை மனு அளித்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.