ஊத்துக்கோட்டை அருகே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட முனிசேகர் ரெட்டி கட்சி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் திருக்கோவில் முன்னாள் தலைவர் முனிசேகர் ரெட்டியை அக்கட்சியின் மாநில செயலாளராக அண்மையில் நியமித்தார்.
அதன்படி ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி பகுதியில் நாகலாபுரம்- சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள தனியார் திருமணத்தில் கட்சி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் திருக்கோவில் முன்னாள் தலைவரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக பொறுப்பேற்றுள்ள முனிசேகர் ரெட்டி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சத்தியவேடு தொகுதி பொறுப்பாளர் ராஜேஷ் கலந்துகொண்டு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டிய பணிகள் குறித்தும், தற்போது ஆந்திர மாநிலத்தில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர் 2029 சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை வெற்றி பெற்று மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்பார் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சந்தைப்படுத்தல் குழு தலைவர் ஜே.பி.முனிரத்னம், நாகலாபுரம் மண்டலம் நிர்வாகிகள் மகேஷ் ரெட்டி, ஷியாம், வரதபாளையம் மண்டல தலைவர் தயாகர் ரெட்டி, பிச்சாட்டூர் மண்டல நிர்வாகி ஹரிச்சந்திரா ரெட்டி,சூரஜ் ஆனந்த்,ராகேஷ் கிரண், பிரசாத், சத்ரத், பள்ளிகொண்டேஸ்வர கோவில் அறக்கட்டளை உறுப்பினர் லெக்ஸ்ரெட்டி, கே.வி.பி புரம் மண்டலம் நிர்வாகி (முன்னாள் ZPTC) தனஜெய ரெட்டி, (முன்னாள் ZPTC கே.வி.பி புரம் மண்டலம் டேவிட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.