கும்மிடிப்பூண்டி: பெரியபாளையம் அருகே உள்ள கடல் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டது 18 பேர் உயிரிழந்த நிலையில் அங்குள்ள அமோனியம் வாயு பத்திரமாக நாளை வெளியேற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், பாதுகாப்பாக அமோனியா வாயு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் கடல் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்டதில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தொழிற்சாலையில் இருந்து  அமோனியாவை வெளியேற்றுவதற்காக மாவட்ட நிர்வாகம் 04 மற்றும் 05 ஆம் தேதி என இரண்டு தினங்களுக்கு தொழிற்சாலையையொட்டி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மோனியா வாயு டேங்கரில் பாதுகாப்பாக அகற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி தவெக எம்எல்ஏ விஜயகுமார் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், 04 ம் தேதி காலை 6 மணி முதல் மக்கள் தொழிற்சாலை பக்கம் வர வேண்டாம் எனவும், அச்சப்பட வேண்டாம் எனவும்,மற்ற தொழிற்சாலைகளிலும் இதுபோன்ற நிகழாத வண்ணம் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு ரயில் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும், முதல்வர் சிறப்பாக செயல்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”