திருவள்ளூர்: பொன்னேரி அருகே ஆடி பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் மற்றும் ஸ்ரீ மங்காவரத்தார் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் 13வது ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் அலகு குத்தி தீக்குழியில் இறங்கி தீமிதித்து தாங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மதுரா மேட்டுப்பாளையத்தில் சுமார் 135 அடியில் பத்ரகாளி அம்மனுக்கு சிலை அமைக்கப்பட்டு ஆடி பௌர்ணமி முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தர்கள் தீமிதித்து தாங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (30 ம் தேதி) 13 வது ஆண்டாக ஆடி பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் மற்றும் ஸ்ரீ மங்காவரத்தார் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் 150 க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டி மாலை அணிந்து பௌர்ணமி நாளான இன்று அலகு குத்தி தீக்குழியில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியினை சங்கர் சாமியார் ஊர் பெரும்தனக்காரர் குப்பு ரெட்டியார் உள்ளிட்ட மதுரா மேட்டுப்பாளையம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.