தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ டி ஜெ கோவிந்தராஜன் தலைமையில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் அமைதிப் பேரணி மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மூலம் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி ஜெ கோவிந்தராஜன் தலைமையில்
கவரப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் கலைஞர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி வேனு ஆனந்த்குமார் தலைமையில் கவரப்பேட்டையில் உள்ள கழக அலுவலகத்தில் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் இதில் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.