பேரறிஞர் அண்ணாவின் 118 வது  பிறந்தநாளை ஒட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் அண்ணா சிலைக்கு  மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாளை ஒட்டி பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார் ஏற்பாட்டில் பொன்னேரியில் உள்ள அண்ணா சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 பின்னர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அப்போது அதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா , மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மீஞ்சூர் நகர செயலாளர் பட்டாபிராமன், 15வது வட்ட செயலாளர் காமராஜ், எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத் முன்னாள் தலைவர் பா. சங்கர் இலுப்பாக்கம் ரவி, சத்தியமூர்த்தி, விஜி, சிவகுமார் ,ஸ்ரீதர், சம்பத் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related

“திண்டுக்கல் அருகே திடீர் சாலை மறியல்- கரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு”