பல்லடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கனிமங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருப்பூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தின் தனி வருவாய் ஆய்வாளர் பெத்துராஜ் மற்றும் உதவியாளர் மஞ்சுநாத் ஆகியோர் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, பல்லடம் வட்டம் சின்னக்கரை – வேலம்பாளையம் சாலையில் உள்ள கரைப்புதூர் லட்சுமி நகர் பாலம் அருகே வந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையின்போது, வாகன ஓட்டுநரான சாமுவேலிடம் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டிருந்த பொருள் குறித்து கேட்டபோது, சுமார் 3 யூனிட் அளவிலான சாதாரண ஜல்லிக்கற்கள் (கனிமம்) ஏற்றிச் செல்லப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், மேற்கண்ட கனிமத்தை எடுத்துச் செல்ல தேவையான அரசு அனுமதி ஆவணங்கள் மற்றும் நடைச்சீட்டு (Permit) குறித்து அதிகாரிகள் கேட்டபோது, எந்தவித அரசு அனுமதி ஆவணங்களும் இல்லை என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி கனிமங்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, டிரைவர் சாமுவேலை கைது செய்து பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி கனிம வளங்களை இயற்றி வந்த டிப்பர் லாரி ஓட்டுனர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.