திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி வைத்தியலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து(25). இவர் நேற்று இரவு தூத்துக்குடிக்கு சென்று விட்டு முக்காணி வழியாக ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
இரவு ஒன்பது மணி அளவில் முக்காணி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். மேலும் அவர் வந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி முழுவதும் எரிந்தது.
இதையடுத்து அங்கு நின்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு காலை சிகிச்சை பலனின்றி இசக்கிமுத்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.