தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து ஓரளவு காணப்பட்டதால் விலை குறைய தொடங்கியது. தோல்பாறை மீன்கள் அதிக அளவில் வந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் சனிக்கிழமை என்பதால் கரை திரும்பின கரை திரும்பிய நாட்டுப் படகுகளில் ஓரளவு மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது.

இதன் காரணமாக நீண்ட நாட்களுக்குப் பின்பு மீன்களின் விலை குறைவாக காணப்பட்டது விலை மீன் கிலோ 450 ரூபாய் வரையும் பாறை மீன் கிலோ 400 ரூபாய் வரையும் ஊளி மீன் கிலோ 350 ரூபாய் வரையும் நண்டு கிலோ 750 ரூபாய் வரையும் சீலா மீன் கிலோ 850 ரூபாய் வரையும் சாலை மீன் ஒரு கூடை 1500 ரூபாய் வரையும் விற்பனையானது தோல்பாறை மீன்கள் அதிக அளவில் வந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் தோல் பாறை ஒரு கிலோ 220 ரூபாய் வரை விற்பனையானது

மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் மீன்களை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”