தேனி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் இயக்க மாநில தலைவர் நம்பி ராமகிருஷ்ணன் தேனி மாவட்டம் கூடலூரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் கூடலூரில் விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் இயக்கம் சார்பில் புதிய நிர்வாகிகளை அறிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்காக வருகை புரிந்த விசுவ ஹிந்து பரிஷத் இயக்க மாநில தலைவர் கட்சியின் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து கட்சியின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அவர்களுக்கு விளக்கி கூறினார்.

அதனைத் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் இயக்க நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்தவர்கள். கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் கட்சியின் கொடியினை ஏற்றி ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டு மலர் தூவி கொடி ஏற்றி மரியாதை செய்தனர்.அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்கத் தலைவர் அம்பி ராமகிருஷ்ணன்  கூறுகையில் கடந்த 1996 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்வதற்காக பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். 

மேலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மூன்று தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.  கூடலூர் நகர்ப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த தாமரைக் குளம் ஈஸ்வரன் திருக்கோவிலை புனரமைத்து சீரமைக்க வேண்டும் என்றும் தமிழக கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழகத்திலிருந்து பளியன்குடி வழியாக சாலையை அமைத்து இறைவழிபாடு நடத்த பொதுமக்கள் சென்று வருவதற்கு  தமிழக  அரசு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான இந்த கோரிக்கைகள் மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறினார்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”