தேனி யில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம். மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் 100 க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேனி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான அல்லிநகரம், ரத்தினம் நகர் , பழனிச்செட்டிபட்டி, அரண்மனைபுதூர், வடபுதுப்பட்டி ஆகிய பகுதிகளில் இந்து எழுச்சி முன்னணி சார்பாகவும் நூற்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகல் இந்து எழுச்சி முன்னணி சார்பாக நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொம்மையகவுன்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் முன்பு ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நிறுத்தப்பட்டது. இதில் அதிகபட்சமாக இந்து எழுச்சி முன்னணி சார்பாக 9 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை முதலாவதாக நுறுத்தப்பட்டு ஊர்வலம் துவங்கியது.

இந்த ஊர்வலத்தில் 200 க்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் ஒரு அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகளை தலையில் சுமந்தவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பொம்மைய கவுன்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் முன்பு துவங்கிய இந்த பேரணி அல்லிநகரம், தேனி நேருசிலை மும்முனை சந்திப்பு, பங்களாமேடு வழியாக அரண்மனைபுதூர் முல்லைப் பெரியாற்றில் கரைப்பதற்கு நூற்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொடர்ந்து விநாயகர் சிலை கரைப்பு நடைபெற்று வருகிறது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.