தேனி: தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இவர் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும் தீரத்துடன் போராடி பயங்கரவாதிகளை வீழ்த்தியதற்காக ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது இவருக்கு வழங்கப்பட்டது.
அவரது இந்த வீரதீர செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சார்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பி.சுரேஷ் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று சால்வை அணிவித்தும் நினைவு கேடயம் வழங்கியும் பாராட்டுகளை தெரிவித்தார்.
தொடர்ந்து ராணுவ வீரரின் குடும்பத்தினருடன் உரையாடிய முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பி.சுரேஷ், லான்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பி.சுரேஷ் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக உள்ளார்.
இந்த நிகழ்வுகள் குறித்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில் ஒவ்வொரு ராணுவ வீரரின் தியாகச் செயல்கள் போற்றப்பட வேண்டும், ராணுவ வீரர்களுக்கு என அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்,அந்த வகையில் தமிழக முதல்வர் கீர்த்தி சக்கர விருது பெற்ற மீனாட்சி சுந்தரத்தை நேரில் அழைத்து பாராட்டியது ராணுவ வீரர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு அங்கீகாரமாக உள்ளது என தெரிவித்தார். மேலும் போர்காலங்களிலும் ராணுவ சேவைகளில் பணியாற்றக்கூடிய ராணுவ வீரர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பொதுமக்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பக்க பலமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் அணி என்ற ஒன்று அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூடிய விரைவில் முன்னாள் ராணுவ வீரர்கள் அணி என்று ஒன்று உருவாக்கப்பட்டு நம் தேசம் காக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஓர் அரனாக இருந்து செயல்பட வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.
கீர்த்தி சக்கரா விருது பெற்ற மீனாட்சி சுந்தரத்தை வாழ்த்த வந்த முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பி.சுரேஷ் உடன் ஏராளமான முன்னாள் ராணுவத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.