தேனி-உத்தமபாளையம்: கிராமப் பகுதிகளில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் வீதி வீதியாக சென்று பெண்கள் பாதுகாப்பு மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்.

தமிழக முதல்வர் பொறுப்பேற்றவுடன் தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண் அதிரடிப்படையினை அறிவித்து அதற்கான காவலர்களை தேர்வு செய்து தமிழகம் முழுவதும் தீவிர ரோந்து பணி மற்றும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  நிகழ்ச்சிகளை சிங்கப்பன் அதிரடி படையினர் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆனைமலையன்பட்டி, சின்ன ஓவுலாபுரம், நாகைய கவுண்டன்பட்டி,

மற்றும் ராயப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பெண்களின் பாதுகாப்பு குறித்தும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள். சார்பு ஆய்வாளர் பாண்டிச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர் நிகழ்வில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவரேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் உடனடியாக தங்களின் தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறினார்கள். மேலும் பள்ளி குழந்தைகளிடமும் விழிப்புணர்வு குறித்து எடுத்துக் கூறினார்கள் .

மேலும் 24 மணி நேரமும் இந்த சிங்கப்பெண் அதிரடிபடையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபடுவதால் குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடத்திற்கு விரைந்து வந்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உடனடியாக அழைப்பதற்கு தொலைபேசி எண்னை வழங்கினார்கள். 

பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வரும் இந்த சிங்கப்பெண் அதிரடி படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Related

“ஹஜ் பயணிகளுக்கு ரூ.50 ஆயிரம் மான்யம் வழங்க முதலமைச்சரிடம் கோரிக்கை: முஸ்தபா எம்.எல்.ஏ.”