தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 100 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் கடையடைப்பு நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி 98 மலை கிராம மக்களை வனத்துறை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடமலை- மயிலை ஒன்றியத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சிகளில் உள்ள 98 மலை கிராம மக்களை ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்க்குட்ப்பட்ட கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வருசநாடு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் கடைகளை அடைத்து போராட்டம் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலை கிராம மக்கள் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மலை கிராம மக்களுக்கு ஆதரவாக கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் டீக்கடை , ஓட்டல் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் அடைத்து வணிகர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.