தேனி: தேனி மாவட்டம், கம்பத்தில் ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெயர் பலகை திறப்பு விழாவில் கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா பங்கேற்றார்.

தேனி மாவட்டம்  கம்பத்தில் அமைந்துள்ளது ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளிக்கான இடத்தினை ஆங்கூர் ராவுத்தர் என்ற தனிநபர் தானமாக வழங்கி இருந்தார். இதனை அடுத்து அவரது நினைவாக பள்ளிக்கு  அங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என பெயர் வைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கூர் ராவுத்தர் என்ற பெயர் நீக்கப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்று மட்டும் பெயரிடப்பட்டு வந்தது. இதற்கிடையே  மீண்டும் ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என பெயர் வைக்க வேண்டும் என்று கம்பம் நகர ஜமாத்தார்கள் மற்றும் ஆங்கூர் ராவுத்தர் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளும் போராடி வந்தனர். அதனைத் தொடர்ந்து மீண்டும் பள்ளிக்கு  அங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி என பெயர் சூட்டப்பட்டது. 

பள்ளியின் நுழைவாயிலில் பெயர்  எழுத்துக்களால் எழுதப்பட்டு செயல்பட்டு வந்தது

கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா

 இந்நிலையில்  பள்ளியின் நுழைவாயிலில் உலோகத்தால் ஆங்கூர் ராவுத்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என பெயர் பலகையும்  மேலும் உறுதித் தன்மையுடன் கொண்ட பெயர் பலகை ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  இதற்காக முயற்சி மேற்கொண்டு உலோகத்தால் ஆன பெயர்பலகை வைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா மற்றும் கம்பம் நகர ஜமாத்  தலைவர்கள் மற்றும் ஆங்கூர் ராவுத்தர் குடும்ப வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் தமிழக வெற்றிக்கழகத்தைச் சார்ந்த ஏராளமானோர்  கலந்து கொண்டனர். பெயர் பலகை திறக்கப்பட்டு அதனுடன் கல்வெட்டும் திறக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியின் போது பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ  கூறுகையில், கல்விக்காக கொடை வள்ளலாக செயல்பட்ட ஆங்கூர் ராவுத்தர் பெயர் வரலாற்றில் இடம்பெற வேண்டும் மூடி மறைக்கப்பட கூடாது என்பதற்காக இன்று உலோகத்தால் ஆன பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு நற்காரியங்கள் செய்த அனைத்து நல்லவர்களின் பெயர்களும் வெளி கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.

Related

“பழநி முருகன் கோயிலில் பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் அமைச்சர் ரமேஷ்”