தேனி- கடமலைக்குண்டு: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி தேனி மாவட்டத்தில் உள்ள 98 மலை கிராம மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து- கடமலைக்குண்டு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன் கபீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் மலை கிராம மக்களை வெளியேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள 98 மலை கிராம மக்களை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன் கபீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் முதலில் கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு கடைசியில் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழக அரசு மலை கிராம மக்களை காக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வனத்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.