தேனி: கேரளாவில் மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் தனியார் பேருந்து சேவை தொழில் நலிவடையும் சூழல் உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கேரள அரசு பிரியதர்ஷினி மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்து உள்ளது. இதன் மூலம் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் பிரியதர்ஷினி மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் தங்களது வருமானம் பாதிக்கப்படும், தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அத்துடன் தங்களது பஸ் சேவைகளை நிறுத்த முடிவு செய்து இருக்கின்றனர். இதற்கு மோட்டார் வாகன துறையிடம் ஜி படிவம் சமர்பிக்க உள்ளனர்.

ஜி படிவம் என்பது குறிப்பிட்ட காலத்திற்கு பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைப்பதாக அளிக்கும் விண்ணப்பம் ஆகும். இந்த படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் பஸ்கள் ஓடாத அந்த காலத்திற்கு சாலை வரியை செலுத்த வேண்டியதில்லை. திருச்சூர் பாலக்காடு மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த பஸ்களின் சேவையை நிறுத்த ஜி படிவம் சமர்பிக்க உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”