முல்லைப்பெரியாறு அணை மற்றும் தேனி மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டி பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் விவசாயிகள் வருண பூஜை செய்து வழிபாடு.
தேனி, மதுரை திண்டுக்கல் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் என தென் தமிழகத்தின் நீராதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து நீர்மட்டம் உயர வேண்டி இன்று கம்பம் பள்ளத்தாக்கு நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் வருண பூஜை யாக சாலை வழிபாடு நடத்தப்பட்டது.

தேனி அருகே உள்ள தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமான வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் நடந்த இந்த பூஜையில், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மழை வேண்டி அம்மனை வழிபட்டனர். முன்னதாக வீரபாண்டியில் செல்லக்கூடிய முல்லைப் பெரியாற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட நீருக்கு யாக சாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை மற்றும் தேனி மாவட்டத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் தட்டுப்பாடு நீங்க வேண்டி யாக வேள்விகள் நடத்தப்பட்டது. மேலும் கௌமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.