தேனி மாவட்டம் கூடலூரில் தொடர்ந்து 15 நாட்களாக நடைபெற்று வரும் இலவச பாத சிகிச்சை தெரப்பி மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். இந்த மருத்துவ முகாம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ​தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள மேலக்கூடலூர் ஸ்ரீ மந்தையம்மன் கோவில் உறவின்முறை மற்றும் தேனி 'ஹெல்த்தி லைஃப் வெல்னஸ் சென்டர்' இணைந்து பொதுமக்களுக்கான  இலவச பாத தெரப்பி முகாமை நடத்தி வருகின்றன. ​தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் இந்த 'ஃபுட் பல்ஸ் தெரப்பி' (Foot Pulse Therapy) சிகிச்சையின் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகி, நரம்புகளின் செயல்திறன் அதிகரிக்கும். மேலும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்பட்டு, உடல் உறுப்புகள் சீராக இயங்க வழிவகுக்கிறது. உடலில் உள்ள அனைத்து வலிகள் மற்றும் நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் சிகிச்சை முறைகள் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன. ​சர்க்கரை நோய், பாத வலி, பாத எரிச்சல், மன அழுத்தம், மனச்சோர்வு, பக்கவாதம், உடல் நடுக்கம், தூக்கமின்மை, முடக்குவாதம் உட்பட 50-க்கும் மேற்பட்ட நோய் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மருத்துவர்களும் பயிற்சியாளர்களும் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சை முறைகளை வழங்கி விளக்கமளித்து வருகின்றனர். ​இம்முகாமில் கூடலூர் நகரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நாள்தோறும் சிகிச்சை பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”