தேனி:
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி மலையடிவாரப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1350 லிட்டர் வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல். உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க துறையினர் விசாரணை.
வெளி மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக மது பாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வண்ணமாக மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க துறையினருக்கு உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி மலையடிவாரப் பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது இந்த தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமந்தன்பட்டி பகுதிக்கு மேற்புறம் உள்ள மலையடிவார தோட்டத்துப் பகுதியில் வெளி மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அந்த மது பாட்டில்களை உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தோட்டத்தைச் சார்ந்த உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி பகுதியை சார்ந்த சிவக்குமார் மற்றும் அவரது மகன் நிஷான் ஆகிய இருவரையும் மதுவிலக்கு அமலாக்க துறையினர் கைது செய்தனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள் 1800 இருந்துள்ளது அதன் கொள்ளளவு 1350 லிட்டர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த மது பாட்டில்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.