பெரியகுளம், தேனி: "தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புதிய பால் குளிரூட்டும் மையத்தை பெரியகுளம் தவெக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அலுவலகம் அருகே, ஆவின் நிறுவனம் சார்பில் ரூபாய் 28.37 இலட்சம் மதிப்பீட்டில் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய பால் தொகுப்பு குளிரூட்டும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிலையத்தை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தியநாதன் மற்றும் பெரியகுளம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் ஆகியோர் இணைந்து திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மாவட்ட ஆட்சித் தலைவர் குறிப்பிட்ட நேரத்திற்கு விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

ஆனால், சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் குறித்த நேரத்திற்கு வராததால், அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது.
இதனைத் தொடர்ந்து, நீண்ட நேரம் கழித்து சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்த பின், மாவட்ட ஆட்சியருடன் இணைந்து ரிப்பன் வெட்டி புதிய பால் குளிரூட்டும் மையத்தைத் திறந்து வைத்தார்.
மேலும், மையத்தில் உள்ள உபகரணங்களையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.