கம்பம் நகரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த  500க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் .

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது .நகர் பகுதியில் உள்ள பத்தாவது வார்டு 60 அடி சாலையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கி ஆயத்திற்கு மேற்பட்ட ஏழை எழியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

மேலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெறும் தற்போதைய ஆட்சி காலத்தில் லஞ்ச லாவண்யம் இன்றி ஊழலற்ற ஆட்சியை மக்களுக்கு சிறப்பான முறையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வழங்குவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை அறிந்து தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

தவெகவில் இணைப்பு.

மாற்றுக் கட்சியிலிருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்கும் விதமாக கட்சியி துண்டுகளை அணிவித்து கௌரவித்தனர். இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நகர பேரூர் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Related

“முதலமைச்சரை அவதூறாக பேசுவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும் : அமைச்சர் நிர்மல் குமார்!”