இராயப்பன்பட்டி, தேனி: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் பாட புத்தகங்களுடன் சென்று ஆய்வு செய்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார். இராயப்பன்பட்டி கிராமத்தை கல்வி வில்லேஜ் ஆக தரம் உயர்த்தப்பட்டு இக்கிராமத்தில் அரசு சித்த மருத்துவம் மற்றும்  திரைப்படதுறை கல்லூரி நிறுவப்படும் என மாணவர்களின் உறுதியளித்தார் .

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியில்  தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா. தொடர்ந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினராக அவர் நாள்தோறும் பல்வேறு  ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும்   பள்ளியான சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பாடப்புத்தகங்கள் உடன் சென்று இன்று நடைபெற்ற பிரேயர் இல் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து மாணவர்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்தினார்.

முன்னதாக பள்ளி சார்பில் கம்பம் சட்டமன்ற உறுப்பினருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியர் மத்தியில் பேசிய கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எதிர்காலத்தில் பள்ளி மாணவ மாணவியர் லஞ்ச லாவண்யம் இல்லா அரசு வேலைகளுக்கு செல்லும் வகையில் தற்போது அரசு அமைந்துள்ளது.அரசு வேலை என்றால் ஒரு ரூபாய் கூட நீங்கள் யாரும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை அந்த வகையில் லஞ்சத்தை ஒழிப்பதற்காக நமது முதல்வர் முற்றிலும் பாடுபட்டு வருகிறார்.

அதேபோன்று பள்ளி மாணவ மாணவியர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது எதிர்வரும் காலங்களில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.மேலும் இராயப்பன் பட்டி ஊராட்சி பகுதியில் அரசு கல்லூரிகள் அமைப்பதற்கு முழுவதும் முயற்சி எடுத்து வருவதாக மாணவர்களிடம் தெரிவித்தார்.

அதன் பின்பாக கம்பம் அரசு கள்ளர் பள்ளியில் நடைபெற்ற சித்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மாணவ மாணவியல் மத்தியில் சிறப்புரை நிகழ்ச்சி மாணவ மாணவியருக்கு இலவச சித்த மருந்து பெட்டகங்களை வழங்கினார். அதன் பின்பு கம்பம் நகரில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று அங்குள்ள குறை நிறைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் ஏராளமான தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”