தேனி,கம்பம் : தேனி மாவட்டம் கம்பம்  நகர் பகுதியில் தூய்மை பணிகள் குறித்து நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா,  உழவர் சந்தை, குப்பை கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் கம்பம்  சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா நாள்தோறும் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி  தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலையில் ஆய்வு மேற்கொண்டார்.

தூய்மைப் பணியை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா.

கம்பம் வ.உ.சி திடல் பகுதியில் வ.உ.சி சிலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கம்பம் காந்திஜி பூங்கா பகுதியில் ஆய்வு செய்தார் பூங்காவில் உள்ள  சிறுவர்கள் விளையாடக்கூடிய பொருட்கள் அனைத்தும் உடைந்து காணப்பட்டதை அதிகாரிகளை அழைத்து உடனடியாக சரி செய்யுமாறு கூறினார், மேலும் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள கம்பத்தின் முதல் நூலகமான காந்திஜி நூலகத்தினை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும்  கம்பம் நகராட்சி துறை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். 
அதன் பின்பு கம்பம்  உழவர் சந்தை முன்புறம் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்துமாறும் அங்குள்ள பழைய அங்கன்வாடி மையத்தின் கட்டிடத்தை இடித்துவிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் உழவர் சந்தை உட்புறம் சென்று ஆய்வு செய்து அங்குள்ள வியாபாரிகளிடம் நிறை குறைகள் குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள கழிவறைகள் பயன்பாடு இன்றி கிடப்பதாகவும் மழை காலங்களில் உழவர் சந்தையில் அதிக அளவில் தண்ணீர் தேங்குகிறது அதனை சரி செய்து தருமாறு வியாபாரிகள் சட்டமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனையும் நிவர்த்தி செய்து தருவதாக உறுதி அளித்தார். 
அதன் பின்பு கம்பம் டி கே எஸ் நகர் பகுதியில் உள்ள சிறுவர்  பூங்காக்களை ஆய்வு செய்தார். அங்குள்ள பூங்காவில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் மேலும்  இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் வேதனை அடைவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். 
இதனை அடுத்து நகராட்சி துறை அதிகாரிகளை அழைத்து உரிய முறையில் பூங்கா பராமரிக்கப்பட வேண்டும் அதேபோன்று குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் பூங்காவை சீரமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதனை சரி செய்து தருகிறேன் என தெரிவித்துள்ளார்.

பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா.

அதன் பின்பு கம்பம் நகராட்சி குப்பை கிடங்கு பகுதிக்கு சென்று நாள் ஒன்றுக்கு எவ்வளவு குப்பைகள்  சேகரம் ஆகிறது எவ்வளவு குப்பைகள்  அழிக்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில் கம்பம் சட்டமன்ற தொகுதி முழுவதும் நாள்தோறும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறதாகவும் அதன்படி இன்று கம்பம் நகராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். மேலும்  கம்பம் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது குறை நிறைகளை எடுத்துக் கூறியுள்ளனர்.அதனை சரி செய்வதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.மேலும் கம்பம் நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியாக பிரித்து  வழங்க வேண்டும் அதன் மூலம் தூய்மை பணியாளர்களின் வேலைப்பளு குறைந்து  அதிக அளவில் அவர்கள் பணி செய்வதற்கு வழிவகை செய்யப்படும் அரசு துறைக்கு மட்டும் பொறுப்பின்றி பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொண்டால் தூய்மையான கம்பம் நகரினை உருவாக்க முடியும் என கேட்டுக்கொண்டார்.

இது போன்ற கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு ஆய்வு பணியில் மேற்கொண்ட கம்பம் சட்டமன்ற உறுப்பினருடன் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக  வெற்றி கழகத்தைச் சார்ந்தவர்களும் உடன் இருந்தனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”