குச்சனூர் கோயில் வளாகத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா.

​தென்தமிழகத்தில் புகழ்பெற்ற தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே உள்ள குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் தேனி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இக்கோயில் வளாகத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர் ஒருவர், உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்து சடலமாகக் கிடந்துள்ளார்.

​அவ்வழியாகச் சென்ற கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, சம்பவ இடத்திற்குச் சென்று அவரது உடலைத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டார். இவரது இச்செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

“திண்டுக்கல் அருகே திடீர் சாலை மறியல்- கரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு”