தேனி-சுருளி அருவி: தேனி மாவட்டம் சுருளி அருவியில் அதிகாலை முதல் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் இணைந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தொடர்ந்து துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்ற சம்பவம் சுற்றுலா பயணிகளிடமும் பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பல வருடகங்களாக பராமரிப்பின்றி கிடந்த ஆற்றுப்பகுதியில்  சட்டமன்ற உறுப்பினர் களம் இறங்கி தொடர்ந்து  குப்பைகளை அகற்றி வருகின்றார். தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது.

 ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச் சரணாலய பாதுகாப்பு பகுதியாகவும் சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும் தங்களது இல்லங்களில் இருந்த முன்னோர்களுக்கு  தர்ப்பணம் கொடுப்பதற்காக சுருளி அருவியின் ஆற்றங்கரை பகுதிக்கு எல் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதற்காகவும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து செல்கின்றனர் .

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுருளி அருவியின் ஆற்றங்கரை பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டிய வனத்துறையினரும் சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினரும் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளாமல் அலட்சியப் போக்கு காட்டி வந்ததால் அருவியின் ஆற்றங்கரை பகுதி குப்பை மேடாகவும் சுகாதாரமற்ற முறையில் தொற்றுநோய் பரவும் அபாய நிலையிலும் இருந்து வந்துள்ளது.

இதுகுறித்து சுருளி அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்து புண்ணிய ஸ்தலமான புனித இடத்தை தேடி வந்தும் புனிதத்துவம் இல்லாமல் சுருளி அருவி பகுதி காட்சி அளிப்பதாகவும் அதனால் வருவதற்கு விருப்பம் இல்லை என்று  தொடர்ந்து புகார் வைத்த வண்ணம் இருந்துள்ளனர்.

இந்த புகாரிணை ஏற்றுக்கொண்ட கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் வனத்துறையினரிடமும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கடந்த சில தினங்களாக வலியுறுத்தி வந்துள்ளார்.

அதனை ஏற்றுக் கொள்ளாமல் வனத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் தொடர்ந்து அலட்சியப் போக்கு காட்டி வந்ததால் இன்று அதிகாலை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் வந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா துப்புரவு பணி மேற்கொள்ளும் உபகரணங்களோடு  வந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். 

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என்றும் பாராமல் ஆற்றுப்பகுதி மற்றும் கடைவீதி பகுதிகளில் தாமாக முன்வந்து களம் இறங்கு குப்பைகளை அள்ளி சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற சம்பவம் சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடமும் பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .

இதுகுறித்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா கூறுகையில் வனத்துறையினரிடமும் ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் பலமுறை துப்புரவு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கூறியதாகவும் அதற்கு அவர்கள் தயக்கம் காட்டி வந்ததால் தாமாக தனது ஆதரவாளர்களோடு வந்து துப்புரவு பணிகளை மேற்கொண்டதாகவும் இதற்கு முன்பு இருந்த ஆட்சிக்காலமும் சரி இப்போதும் கூட எனக்கு அருகாமையில் உள்ள ஆண்டிபட்டி தொகுதியாக இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரும் எந்தவித நடவடிக்கையும் மேம்பாட்டு வளர்ச்சி பணிகளையும்  இதுவரை சுருளி அருவிப் பகுதியில்  எடுக்கவில்லை தமிழக முதல்வரின் ஆட்சி காலத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்காகவே இது போன்ற களப்பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் குறைகள் அனைத்தும் சரி செய்து வருவதாகவும்

மேலும் தான் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதை பார்த்து இன்று பணிகளை மேற்கொள்ள வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் இது போல் இனிவரும் காலங்களில் தொடர்ந்து பணிகளை செய்ய வேண்டும் என அவர்களுக்கு எச்சரிக்கை அளித்தும்

 இனிவரும் காலங்களில் சுருளி அருவியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார் .

Related

“ஹஜ் பயணிகளுக்கு ரூ.50 ஆயிரம் மான்யம் வழங்க முதலமைச்சரிடம் கோரிக்கை: முஸ்தபா எம்.எல்.ஏ.”