தேனி, ஆக.2- தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுயம்பு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது, சுரபி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில் சனீஸ்வரர் பகவான் சுயம்புவாக எழுந்தருளி காட்சியளிக்கிறார். 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயிலில் ஆடி மாத சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்களது சகல தோஷங்கள் நீங்க சனீஸ்வர பகவானை தரிசித்துச் செல்கின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4:30 மணிக்கு மேல் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். 

அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்து கோயில் வளாகத்தில் சிறிது நேரம் அமர்ந்து சாமி தரிசனம் செய்த பின்பு புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் பல்வேறு பகுதிகளில் வருகை தந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது தோஷங்கள் நிவர்த்தி செய்ய சுரபி நதிக்கரையில் நீராடி எல் தீபம் ஏற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து வருகிறார்கள். 

குச்சனூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சனீஸ்வர பகவானே தரிசித்துச் செல்கின்றனர்.

Related

“சட்டத்துறை அமைச்சர் பொய் சொல்வதில் கின்னஸ் சாதனை படைக்கிறார்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்”