மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்குக் குறைந்து நீர்வரத்து சீரானதால், இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கும்பக்கரை அருவிக்கு, வட்டக்கானல் மற்றும் பாம்பாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இருந்து நீர்வரத்து உள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கும்பக்கரை அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அருவிப் பகுதிக்குச் செல்லவும் குளிக்கவும் தேவதானப்பட்டி வனத்துறையினர் கடந்த நான்கு நாட்களாகத் தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்து நீர்வரத்து சீரானதால், இன்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.