கடந்த 80 நாட்களுக்குப் பிறகு நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால்,  அருவிக்கு நீர்வரத்து தொடங்கியதால் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது கும்பக்கரை அருவி.

​தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு, கடந்த 80 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நீர்வரத்து தொடங்கியுள்ளது.

​மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான வட்டக்கானல் மற்றும் பாம்பார்புரம் ஆகிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், கடந்த 80 நாட்களாக அருவி முற்றிலும் வறண்டு காணப்பட்டது.

​இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி கடந்த ஜூன் 27-ஆம் தேதி முதல் அருவியில் குளிக்க தேவதானப்பட்டி வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.

​இந்நிலையில், நேற்று மாலை முதல் இரவு வரை அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

​நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீர்வரத்து தொடங்கியுள்ளதால், வனத்துறையினரின் கள ஆய்வுக்குப் பின் விரைவில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”