தேனி,ஆகஸ்ட்.1-

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோவிலில் நடைபெற்ற ஆடி பௌர்ணமி திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்தி கடனை மிக விமர்சையாக செலுத்தினார்கள் .

தேனி மாவ ட்டம், சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோவில் ஞான சக்தி பீடத்தில் ஆடி பௌர்ணமி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இத்திருக்கோவிலில் வருடம் தோறும் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு மூன்று நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்று அம்பாளுக்கு புனித நீர் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட சிறப்பு வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். மேலும் மாதம் தோறும் இத்திருக்கோயிலில் அமாவாசை தினத்தன்று நிகும்பலா பூஜை நடைபெறுகிறது.

இதில் முக்கிய பிரமுகர்கள் தேனி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் இந்த நிகும்பலா பூஜையில் பங்கெடுத்து அம்பாளின் ஆசி பெறுகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஆடி பெரும் திருவிழாவில், காலகண்டி, பைரவ மகரிஷி என்று பக்தர்களால் போற்றப்படும் மஹா பிரத்யங்கிரா தேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.
500க்கும் மேற்ப்பட்ட பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்தும், முளைப்பாரி எடுத்தும் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்றும் முல்லைப் பெரியாற்றின் தங்களது முளைப்பாரிகளை கரைத்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். ஸ்ரீ சாந்தி ஞாநஸரஸ்வதீ மாதா குரு தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில், கோவில் அறங்காவலர் ராஜேந்திரன் தலைமையில் சீலையம்பட்டி ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி திருக்கோயில் ஞான சக்தி பீடத்தினர், முக்கிய பிரமுகர்கள்,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சீலையம்பட்டி, சின்னமனூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா அம்பாளை வழிபட்டு வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.