கம்பம்- தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகரில் நூற்றுக்கும்  மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில்  

 தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர் .

தேனி மாவட்டம் கம்பம் நகரத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) தங்களை இணைத்துக் கொண்டனர்.

​கம்பம் பகுதியைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தொழிலதிபர் பிரகாஷ் தலைமையில் த.வெ.க.வில் இணைந்தனர். 

இந்த இணைப்பு விழா கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் நடைபெற்றது.

​கட்சியில் புதிதாக இணைந்த இளைஞர்களுக்கு, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் த.வெ.க.வின் கட்சித் துண்டை அணிவித்து, வாழ்த்தி வரவேற்றார்.

அப்போது த.வெ.கவில் இணைந்தவர்கள் தமிழகத்தில் இதுவரை கண்டிராத அளவிற்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதால் தாங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் .

​இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”