தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த பூ வியாபாரி சந்துரு என்ற கல்யாணசுந்தரம். முகூர்த்த நாளை முன்னிட்டு, அதிகாலையிலேயே புறப்பட்டு தேனி பூ மார்க்கெட்டிற்கு வந்து பூக்களை கொள்முதல் செய்வதற்காக வந்துள்ளார்.
அப்போது மிகவும் சுறுசுறுப்பாக பூக்களை வாங்கி எடை போட்டு அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தூக்கி, முகத்தில் தண்ணீரை பீச்சி அடித்தும் மயக்க நிலையிலையே இருந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்யாணசுந்தரம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த கல்யாணசுந்தரம் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.