தேனி: கடந்த சில மாதங்களுக்கு முன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தவெக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி சர்ச்சையானது. இது தொடர்பாக அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்தும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகின்றன. இந்நிலையில் தவெக போதைப்பொருள் பயன்படுத்தியதாக அமைச்சர் சரத்குமாரை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால்  போலீசார் அனுமதி மறுத்து  திமுகவினரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட திமுகவினர்.

அதன் தொடர்ச்சியாக தேனி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் பழனிசெட்டிபட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலமாக வந்த சுமார் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் பேருந்து நிறுத்தம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரியும், முதலமைச்சர் விஜய்-ஐ கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட  சுமார் 100க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட திமுகவினர்.
Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”