தேனி மாவட்டம் பட்டியலின மற்றும் சிறுபான்மையின மக்களுக்காகக் குரல் கொடுக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

தொண்டர்கள் கொடிகள் மற்றும் கண்டனப் பதாகைகளை ஏந்தி பாஜக அரசுக்கு எதிராகவும், ராகுல் காந்தி மீதான பொய் வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

எதிர்க்கட்சிகளின் குரலையும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடும் தலைவர்களையும் ஒடுக்கவே இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

 இப்போராட்டத்தால் பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related

“காவல்துறை தடையால் இடமாற்றம் செய்யப்பட்ட அனிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ”