தேனி : உத்தமபாளையம் அருகே தென் தமிழக ரோமாபுரி என்று அழைக்கப்படும் 125 ஆண்டுகள் பழமையான இராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலய திருத்தலம் பெருவிழாவில் தேர்பவனி சிறப்பு பிரார்த்தனைகளுடன் நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தென் தமிழக ரோமாபுரி என்று அழைக்கப்படும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டியில் அமைந்துள்ள புனித பனிமய அன்னை திருத்தலம் 125 ஆண்டுகள் பழமையான ஆலயமாகும்.
பழமை வாய்ந்த இந்த புனித பனிமய மாதா ஆலயத்திற்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்துவ இறை மக்களும்,சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த ஆலயம் அமைய பெற்று 125 ஆண்டுகள் ஆகின்றது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் இறைமக்கள் ஒன்று சேர்ந்து புனித பனிமய மாதா ஆலய பெருவிழா வினை மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது பனிமய மாதா திருஉருவச் சிலையினை தேரில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பனிமய மாதா பெரும் திருவிழாவிற்காக கடந்த ஜூலை மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் விழாவினை தொடங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்களும் புனித ஆராதனைகளும், திருப்பலிகளும் நடத்தப்பட்டு
இன்று புனித பனிமய அன்னை திருத்தேரோட்ட விழாவினை மிக விமர்சையாக நடத்தினார்கள்.
நகரின் முக்கிய வீதிகளில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் ஒன்று கூடி திருத்தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இந்த தேரோட்ட விழாவில் பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களின் பேராயர்கள், போதகர்கள்,
பங்குத் தந்தைகள் உட்பட ஏராளமான இறை மக்கள் கலந்துகொண்டு அன்னையே வாழ்க மரியே வாழ்க என்ற கோஷ
முழக்கங்களுடன் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் என பங்கேற்றனர். திருத்தேரோட்ட விழாவில் நிறைவாக தேரானது ஆலயத்தின் வளாகத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இராயப்பன் பட்டி காவல் நிலைய போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.