தேனி- உத்தமபாளையம் அருகே 125 ஆண்டுகள் பழமையான இராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலயத் திருவிழாக் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். 

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டியில் அமைந்துள்ள புனித பனிமய அன்னை திருத்தலம், 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் உள்ள மணி, ரோமிலிருந்து கொண்டு வரப்பட்டது இதன் தனிச்சிறப்பாகும். ​பழமை வாய்ந்த இந்தத் திருத்தலத்திற்குத் தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். இங்கு வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது.

​இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பெருவிழா, வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருவிழாவின் தொடக்கமாக இன்று (ஜூலை 31) கொடியேற்றம் மிக விமரிசையாக நடைபெற்றது. பங்குத்தந்தை தலைமையில் இதற்கான சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. ​இந்த நிகழ்வில் இராயப்பன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவப் பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”