"என் இனிய தமிழ் மக்களே" என்ற அவரது குரல் சினிமா உள்ள வரை நிலைத்திருக்கும் என பாரதிராஜாவுக்கு புகழாரம் சூட்டி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டியளித்தார்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட் ரோடு பகுதியில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

அவரது குடும்பத்தாருக்கு  ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.பி. உதயகுமார்,

கிராமத்தின் கலாச்சாரத்திற்காகவும், பண்பாட்டிற்காகவும் கலைத்துறை நுழைவாயிலை திறந்து வைத்தவர் பாரதிராஜா.

அவரின் இழப்பு பேரிடியாக எல்லோருடைய நெஞ்சிலும் வேதனையை சுமந்து இருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினோம்.

கலைத்துறையில் புதிய அத்தியாத்தை திறந்து வைத்த பாரதிராஜாவிற்கு இறப்பு இல்லை அவரின் பூத உடலுக்கு தான் இறப்பு. 

"என் இனிய தமிழ் மக்களே" என்ற அவரது குரல் சினிமா உள்ள வரை நிலைத்திருக்கும் அதிமுக சார்பிலும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பிலும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தோம் என தெரிவித்தார்.

Related

““பாஜகவை விமர்சித்தால் ஆட்சிக்கு ஆபத்து வருமென பயமா?” - விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி”