தேனி: பாரதிராஜாவின் உடல் வைக்கப்பட்டுள்ள அவர் பண்ணை வீட்டில் திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் ஏற்பாடுகள் குறித்தும் பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தேனி மாவட்ட எஸ்பி மற்றும் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஐஜி சசிமோகன், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த தனி தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றம் எதும் இல்லை, 3 மணிக்கு பிறகு நல்லடக்கம் நடைபெறும் . பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.