டி அமாவாசையை முன்னிட்டு தேனி மாவட்டம் சுருளி அருவியில்   முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். 

தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே தென்கைலாயம் என்று அழைக்கப்படும் புண்ணிய ஸ்தலமாகவும்  சுருளி அருவி விளங்குகிறது. இந்த அருவிக்கு நாள்தோறும் பல பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்வது வழக்கம். அதற்காக பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி. பின்டம் வைத்து எள் தண்ணீர் விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி  முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்வார்கள்

அதன் பின்னர்  இங்குள்ள  பூதநாராயணன் கோயிலில் நவதாணியம் வைத்தும் வேலப்பர் கோயில் கைலாயநாதர் கோயில், ஆதி அன்னாமலையார் கோவில் மற்றும் சிவன் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

மேலும் குடும்பங்கள் செழிக்கவும், விவசாயம் செழிக்கவும், செய்யும் தொழில்கள் நன்கு வளரவும் சுருளி அருவியில் நீராடிவிட்டு இங்குள்ள தீர்த்தங்களை எடுத்துகொண்டு சென்று பக்தர்கள் தங்களது இல்லங்களிலும் தொழில் செய்யும் இடத்திலும் தீர்த்ததையும் தெளிப்பார்கள். 

அவ்வாறு தெளிப்பதால் பீடைகள் நீங்கியும் பிணி நோய்கள் தீர்ந்துவிடுவதாக ஒரு ஐதீகம் உண்டு. இந்நிலையில் இன்று ஆடி அம்மாவாசை தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் காலை முதலே சுருளி அருவி பகுதிக்கு வந்து குவியத் துவங்கியுள்ளனர்.

தற்போது தேனி மாவட்டத்தில் சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களாக அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீர் வரத்து சீரானது இதனை அடுத்து அருவில் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

 இதன் காரணமாக அருவியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புனித நீராடிவிட்டு சுருளி அருவி ஆற்றங்கரை ஓரம் தங்களது முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து எள் தண்ணீர் விட்டு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

பின்னர் இங்கு உள்ள கோவில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் உத்தமபாளையம் தாலுகா காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் பொதுமக்கள் அருவிக்கு வந்து செல்வதற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பத்தில் இருந்து சுருளி அருவிக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிகிறது

Related

“கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் அளித்த காங்கிரஸ் பிரமுகர் மீது தாக்குதல்!”