சிவகங்கையில் நடைபெற்ற பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் டி. செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு கமிஷன் மற்றும் இடைத்தரகர்கள் இல்லாத இணையவழி ஒப்பந்தப் புள்ளி கோரும் முறையை அறிமுகப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றியும் வரவேற்பும் தெரிவித்தார். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிப்படையான டெண்டர் முறை நடைமுறைக்கு வந்திருப்பது ஒப்பந்ததாரர்களுக்கு மிகப்பெரிய நன்மை எனக் கூறினார்.

மேலும், தற்போது அமலில் உள்ள 'செட்யூல் ஆஃப் ரேட்' அட்டவணையில் உள்ள நடைமுறை சிக்கல்களை அரசு சரிசெய்து, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப நியாயமான விகிதங்களை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முன்னதாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி மாநில மாநாடு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related

“தமிழ்நாடு செல்போன் சங்கம் சார்பில் பொன்னேரியில் ரத்ததான முகாம்!”