சிவகங்கை: சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு  மாட்டுவண்டி எல்லைப் பந்தயம்: 30 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்லைப் பந்தயத்தில் 30 ஜோடி மாடுகள் பங்கேற்றன. 

சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் இதில் பங்கேற்றனர். பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 21 ஜோடிகளும் கலந்து கொண்டன.

 சிங்கம்புணரியில் இருந்து நாட்டார்மங்கலம் சாலையில்

 விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாட்டுவண்டிகள் ஒன்றையொன்று முந்திச் சென்று போட்டியிட்டது. பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. போட்டி முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியை சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

Related

“உயிர்த் தியாகம் செய்த கே.ஏ.எஸ். மகேந்திரன் உருவப் படத்துக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மலர்தூவி அஞ்சலி! ”