சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புலியடித்தம்பம் பகுதியில் உள்ள பாரத் பெட்ரோல் பங்கில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் புகுந்து, பணியில் இருந்த இரு மாற்றுத்திறனாளி ஊழியர்களை மிரட்டி பணப்பையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

சமீப காலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், குற்றச்சம்பவங்களை தடுக்க கூடுதல் ரோந்து வாகன சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து காளையார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

“தூத்துக்குடி விசாரணைக் கைதி அருணாச்சலம் உயிரிழப்பு : காவல்துறை அத்துமீறலுக்கு மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!”