சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் மருது பாண்டியர்களின் 225 வது நினைவு தின குருபூஜை விழா சமுதாய மக்களால் கொண்டாடப்படுகிறது. 600-க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்தும் பால்குடம் எடுத்தும் வழிபாடு செய்து வருகின்றனர்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தென்னிந்தியாவில் முதன்முதலில் கூட்டமைப்பை ஏற்படுத்திப் போராடிய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய மருது சகோதரர்கள், பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டு
அக்டோபர் 27 காளையார்கோவிலில் அவர்கள் கட்டிய காளையார்கோவில் ராஜகோபுரம் எதிரே அடக்கம் செய்யப்பட்டதாக வரலாறு. அந்த நாளை நினைவு கூறும் வகையில் காளையார் கோவிலில் ஆண்டுதோறும் அக்டோபர் 27ஆம் தேதி மருது சகோதரர்களின் குருபூஜை நிகழ்வுகள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி இன்று காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் சமுதாய மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் உணர்வுபூர்வமாகக் கடைபிடிக்கப்படுகிறது. கோவை ஆதீனம் தலைமையில் யாக பூஜைகளுடன் தொடங்கிய குருபூஜை விழாவில் காளையார் கோவில் மக்களால் சுமார் 600க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்தும், முளைபாரி எடுத்தும் ஊர்வலமாக நான்கு ரத வீதிகளில் வந்து மருதுபாண்டியர் சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விழாவில் பங்கேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயப் பெருமக்கள், ஆன்மீக மற்றும் சமுதாயத் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மருது சகோதரர்களின் நினைவிடத்திலும் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.