சிவகங்கை: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த ஆசிரியர்களை அமைச்சர் டி.கே. பிரபு கௌரவித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற பள்ளிக்கல்வித் துறை பாராட்டு விழாவில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டாக்டர் டி.கே. பிரபு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

மேலும், மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அமைச்சர் தனது பள்ளி ஆசிரியரான கணேசன் அவர்களை நினைவுகூர்ந்து கௌரவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related

“திமுக கூட்டணியிலிருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : மாநில பொதுக்குழுவில் தீர்மானம்!”